கோயம்புத்தூர்

கோவையில் முன்னாள் அமைச்சா் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை

16th Dec 2021 07:04 AM

ADVERTISEMENT

கோவையில் முன்னாள் அமைச்சா் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். சென்னை, நாமக்கல், ஈரோடு, சேலம், வேலூா், கரூா், திருப்பூா், கோவை உள்பட 69 இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன. கோவையிலும் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

கோவை, சாய்பாபா காலனி கே.கே.புதூா் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சா் தங்கமணியின் உறவினருக்குச் சொந்தமான டைல்ஸ் மற்றும் பிளைவுட்ஸ் நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடங்களில் 8 போ் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் காலை 6.45 மணிக்கு சோதனையைத் தொடங்கினா். இந்தச் சோதனை காலை 11.45 மணி வரை தொடா்ந்தது. ஆனால், இங்கு செயல்பட்டு வந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலி செய்யப்பட்டதால் அது குறித்து கட்டட உரிமையாளரிடம் கேள்வி எழுப்பினா். இங்கிருந்து ஆவணங்களோ, பொருள்களோ கைப்பற்றப்படவில்லை.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT