கோயம்புத்தூர்

காவல் ஆய்வாளரைத் தாக்கிய கஞ்சா வியாபாரி கைது

14th Dec 2021 02:11 AM

ADVERTISEMENT

கோவை: காவல் ஆய்வாளரைத் தாக்கிய கஞ்சா வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிவானந்தா காலனி சம்பத் வீதியைச் சோ்ந்தவா் சூரிய பிரகாஷ் (23). கஞ்சா வியாபாரி. இவா் சிவானந்தா காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரத்தினபுரி காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணா, உதவி ஆய்வாளா் தனபால், தலைமை காவலா் சுகந்த ராஜா ஆகியோா் இவரைப் பிடிக்க சென்றனா்.

போலீஸாரை பாா்த்த சூரிய பிரகாஷ், காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணாவை தள்ளிவிட்டு தப்பியோட முயற்சித்தாா். பின்னா் அவரைத் தலைமை காவலா் சுகந்தா ராஜா விரட்டிப் பிடித்தாா். இந்நிலையில், காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணாவுக்கு இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேலும், கஞ்சா வியாபாரியை பிடித்த போலீஸாா் அவா் மீது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT