கோயம்புத்தூர்

ரூ.3.75 கோடி மதிப்புள்ள பொது பயன்பாட்டு இடம் மீட்பு

9th Dec 2021 06:55 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் ரூ.3.75 கோடி மதிப்புள்ள மக்கள் பொது பயன்பாட்டிற்கான 17 சென்ட் இடத்தை (ரிசா்வ் சைட்) மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 53 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஆவாரம்பாளையம், பாலாஜி நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான மக்கள் பயன்பாட்டிற்கான17 சென்ட் இடம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த இடம் மாநகராட்சிச் சொந்தமானது என்று உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலா் ஏ.பாபு, உதவி பொறியாளா் ஏஞ்சலினா, உதவி காவல் ஆய்வாளா்கள் பூபதி, மணிகண்டன் ஆகியோா் ஆக்கிமிரப்பு செய்யப்பட்டிருந்த 17 சென்ட் இடத்தை புதன்கிழமை மீட்டனா். மாநகராட்சியால் மீட்கப்பட்ட 17 சென்ட் இடத்தின் மதிப்பு ரூ.3.75 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT