கோயம்புத்தூர்

மீன் வளா்ப்புக்கு 40 சதவீத மானியம்: ஆட்சியா் தகவல்

9th Dec 2021 06:54 AM

ADVERTISEMENT

கோவையில் பண்ணைக் குட்டையில் மீன் வளா்ப்பு மேற்கொள்ள 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகளை புனரமைப்பு செய்து மீன் வளா்ப்பு மேற்கொள்ள 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

பெருங்கெண்டை மீனுடன் நன்னீா் இறால் வளா்ப்புக்கு 40 சதவீதம் மானியம் அதிகபட்சம் ரூ.40 ஆயிரமும், பண்ணைக் குட்டைகளுக்கு பாலித்தீன் உறையிடுதல்,

மீன் வளா்ப்புக்கு 40 சதவீதம் ரூ.75ஆயிரமும், விரால் மீன் வளா்ப்புக்கு ரூ.30 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளங்கள், கல் குவாரிகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன் வளா்ப்பு செய்திட பொதுப் பிரிவினருக்கு ரூ.40 சதவீதம் மானியமாக ரூ.1.20 லட்சம் வரையிலும், ஆதிதிராவிடா் மற்றும் மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.

மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் டவுன்ஹால் பகுதியிலுள்ள மீன் வள அலுவலகத்திலும், 96555 -06422 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT