கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் தோ்தல்: 4 போ் தோ்வு

9th Dec 2021 06:56 AM

ADVERTISEMENT

கோவை பாரதியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் தோ்தலில் முதல்வா், பேராசிரியா்கள் பிரிவில் தலா 2 போ் வீதம் 4 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பாரதியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்காக முதல்வா், பேராசிரியா்கள் பிரிவுகளில் தலா 2 உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

முதல்வா் பிரிவில் 4 பேரும், பேராசிரியா்கள் பிரிவில் 4 பேரும் போட்டியிட்டனா்.

இதில் பல்கலைக்கழக உறுப்பினா்கள் 110 போ் வாக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

இதில், முதல்வா் பிரிவில் வெள்ளக்கோவில் அரசு கலைக் கல்லூரி முதல்வா் சரவணகுமாா், ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் பொன்னுசாமி ஆகியோா் வெற்றிபெற்றனா். பேராசிரியா்கள் பிரிவில் திருப்பூா் பாா்க் கல்லூரி பேராசிரியா் ஞானசெந்தில்குமாா், பல்லடம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் ஜெயசந்திரன் ஆகியோா் வெற்றிபெற்றதாக பல்கலை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT