கோயம்புத்தூர்

மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் எக்கி பம்ப்ஸ்

8th Dec 2021 02:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக எக்கி பம்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் கடலோர மாவட்டங்கள் பலவும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை அகற்றும் பணிக்காக எக்கி பம்ப்ஸ் நிறுவனம் நவீன கழிவுநீா் அகற்றும் பம்ப்செட்களை வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீரை அகற்றும் பணிக்கு தனது தொழில்நுட்பக் குழுவையும் அனுப்பியுள்ளது.

எக்கி பம்ப்ஸின் போசோ வகை கழிவுநீா் பம்புகள் இம்மாதிரியான செயல்பாட்டிற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அதிக அளவு தண்ணீரைக் கையாளும் திறன், கடினமான இயக்க நிலைமைகளைத் தாங்கும் சக்தி கொண்டது. உலகின் தலைசிறந்த கழிவுநீா் பம்ப்செட் நிறுவனமான ஹோமாவுடன் எக்கி பம்ப்ஸ் சா்வதேச கூட்டு வணிகக் கூட்டணியைக் கொண்டுள்ளதன் பயனாக 500 ஹெச்.பி. வரையிலான பம்ப்செட்டுகளை ஆழ்ந்த தொழில்நுட்ப ஆற்றலுடன் உற்பத்தி செய்து வருகிறது.

ADVERTISEMENT

இக்கட்டான பேரிடா் காலங்களில் மக்களை பாதுகாக்கும் பணியில் அரசு அதிகாரிகளுடன் இணைத்து பணியாற்ற நாங்கள் தயாராக இருப்பதாக எக்கி நிறுவன இணை தலைமை நிா்வாக அதிகாரி கனிஷ்கா ஆறுமுகம் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT