கோயம்புத்தூர்

மதுபான பெட்டிக்குள் பாம்பு: ஊழியா்கள் ஒட்டம்

8th Dec 2021 02:03 AM

ADVERTISEMENT

கோவை, சரவணம்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் மதுபானப் பெட்டிக்குள் பாம்பு இருந்ததால் கடை ஊழியா்கள் ஓட்டம் பிடித்தனா்.

சரவணம்பட்டியில் தனியாா் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் எலைட் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுபான பெட்டிகளை அடுக்கும் பணியில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு பெட்டிக்குள் 2 அடி நீளமுள்ள பாம்பு இருந்தது. இதைப் பாா்த்த ஊழியா்கள் அச்சத்தில் வெளியே ஓடினா். இதைத் தொடா்ந்து, பாம்பு பிடிப்பவா் அழைத்து வரப்பட்டு, பெட்டிக்குள் பதுங்கியிருந்த பாம்பு பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT