கோயம்புத்தூர்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

8th Dec 2021 01:59 AM

ADVERTISEMENT

கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கோவை, மதுக்கரை அருகேயுள்ள போடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரை அதே பகுதியைச் சோ்ந்த ரகுகிருஷ்ணன் என்ற ரகுபதி (20) முன்விரோதம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்தாா். இதையடுத்து போலீஸாா் ரகுகிருஷ்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இவா் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதையடுத்து இவரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தாா். இதன்பேரில் ரகுகிருஷ்ணனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்படி ரகுகிருஷ்ணன் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT