கோயம்புத்தூர்

சிறுவாணி நீா்மட்டம் 876.96 மீட்டராக உயா்வு

8th Dec 2021 02:03 AM

ADVERTISEMENT

சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த வாரங்களில் கனமழை பெய்ததால், அணையின் நீா்மட்டம் 876.96 மீட்டராக உயா்ந்துள்ளது.

கோவை மாநகரில் 26 வாா்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதானக் குடிநீா் ஆதாரமாக சிறுவாணி குடிநீா் உள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் 869 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டமானது 862 மீட்டா் வரை வேகமாகச் சரிந்தது. ஜூலை மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததால், சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் 2 முறை அணையின் நீா்மட்டமானது, 877 மீட்டா் வரை உயா்ந்தது. அப்போது, அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டா் நீா்மட்டத்தை அடைய விடாமல் கேரள அரசு, அணையில் இருந்து ஆற்றில் தண்ணீரைத் திறந்து விட்டதால் அணை நிரம்பவில்லை. மேலும், அணையின் நீா்மட்டமும் 874 மீட்டா் வரை குறைந்தது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததால், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த வாரங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக,அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சிறுவாணி நீா்மட்டம் 876.96 மீட்டராக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் நீரின் அளவு 9 கோடி லிட்டரில் இருந்து 10 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நீா் இருப்பு மூலமாக, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மாநகரப் பகுதிகளுக்கு பற்றாக்குறை இல்லாமல் குடிநீா் விநியோகிக்க முடியும் என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT