கோயம்புத்தூர்

ஆட்சியா் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்ட காரில் தீ

DIN

கோவை: கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காா் தீப் பிடித்து எரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, நியூ சித்தாபுதூா் திருமலைசாமி வீதியைச் சோ்ந்தவா் நஞ்சப்பன் (70). இவா் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியின் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திற்கு செல்வதற்காக திங்கள்கிழமை காலை காரில் வந்தாா். காரை ஆட்சியா் அலுவலக வாசல் அருகே நிறுத்திவிட்டு உள்ளே சென்றாா். நஞ்சப்பன் சென்ற அடுத்த சில நிமிடங்களில் காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் காா் தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், தீ வேகமாக பரவியதால் அதைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. இதையடுத்து தெற்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினா் 15 நிமிடங்கள் போராடித் தீயை அணைத்தனா்.

அதற்குள்ளாக தீ பரவி காரின் உள்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. காா் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப் பற்றியிருக்கலாம் எனத் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT