கோயம்புத்தூர்

ரூ.8 லட்சம் தங்கத்துடன் நகைப்பட்டறை ஊழியா் தலைமறைவு

5th Dec 2021 12:08 AM

ADVERTISEMENT

கோவையில் ரூ.8 லட்சம் தங்கத்துடன் தலைமறைவான நகைப்பட்டறை ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை பூமாா்க்கெட் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (51). இவா் அப்பகுதியில் தங்க நகைப்பட்டறை நடத்தி வருகிறாா். இவரிடம் கோவையைச் சோ்ந்த துரைராஜ் என்பவா் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா்.

தங்கச் சங்கிலி, வளையல், கம்மல் உள்ளிட்ட ஆபரணங்களாக மாற்ற தங்கக் கட்டிகளை துரைராஜிடம் பாலகிருஷ்ணன் கொடுத்து அனுப்புவது வழக்கம். இதேபோல, ரூ.8 லட்சம் மதிப்பிலான 173.56 கிராம் தங்கக் கட்டிகளை கொடுத்து காந்தி பூங்காவில் உள்ள ஒரு கடையில் கொடுத்து ஆபரணங்களாக மாற்றி வருமாறு துரைராஜை வியாழக்கிழமை அனுப்பிவைத்தாா்.

தங்கக் கட்டிகளுடன் சென்ற துரைராஜ் தலைமறைவானாா். அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பாலகிருஷ்ணன் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தரைராஜை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT