கோயம்புத்தூர்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக தரவரிசை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.க்கு 8ஆவது இடம்

5th Dec 2021 12:09 AM

ADVERTISEMENT

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 8ஆவது இடம் கிடைத்துள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சாா்பில் நாடு முழுவதும் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி வெளியிடப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 67 வேளாண் நிறுவனங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 8ஆவது இடம் பிடித்துள்ளது.

தவிர தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே 4ஆவது இடமும், தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியா்களின் சீரிய பயிற்சி, இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்களின் ஆராய்ச்சி, ஆராய்ச்சிகள் மூலம் பெறப்படும் காப்புரிமைகள் அதிகரிப்பு, வேளாண் விரிவாக்கத்தில் அதிக அளவில் செயல்விளக்கங்கள் ஏற்படுத்துதல், சா்வதேச மாணவா்களை ஈா்த்தது, தொழில்நுட்பப் பயன்பாடு உள்பட பல்வேறு காரணங்களால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று இந்த இடத்தைப் பிடித்துள்ளதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இத்தரவரிசை மூலம் கூடுதல் நிதி, சா்வதேச மாணவா்களின் எண்ணிக்கை மற்றும் ஆராய்ச்சிகள் அதிகரிப்பு என பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வரும் காலங்களில் முதல் 3 இடங்களைப் பிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக செயல் துணைவேந்தா் அ.சு.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT