கோயம்புத்தூர்

தனியாா் வணிக வளாகத்தில் வருமான வரித் துறையினா் 3 ஆவது நாளாக சோதனை

4th Dec 2021 02:51 AM

ADVERTISEMENT

கோவையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல துணிக்கடை மற்றும் வீட்டு உபயோக விற்பனை நிலையத்தின் கிளை, கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள இந்த நிறுவனத்தில் கடந்த இரு நாள்களாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், கோவையில் உள்ள அதன் கிளைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 3ஆவது நாளாக, வெள்ளிக்கிழமையும் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனா்.

 

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT