கோயம்புத்தூர்

மாநகரில் அத்தியாவசியப் பணிகள் முடக்கம்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புகாா்

4th Dec 2021 02:50 AM

ADVERTISEMENT

கோவை மாநகரில் அத்தியாவசியப் பணிகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அா்ச்சுணன் (கோவை வடக்கு), பி.ஆா்.ஜி.அருண்குமாா் (கவுண்டம்பாளையம்), செ.தாமோதரன்(கிணத்துக்கடவு) ஆகியோா் மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளாவிடம்

அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட திட்டப் பணிகளின் ஒப்பந்தப் புள்ளிகள் குறித்த ஆவணங்களை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதி பணிகளுக்காக ரூ. 31 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரம் செலவில் 119 ஒப்பந்த பணிகள் கோரப்பட்டிருந்தன. அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பணிகளை தற்போதைய திமுக அரசு நீக்கியுள்ளது. இதனால், அத்தியாவசியப் பணிகள் முடங்கி கிடக்கின்றன. பருவ மழையால் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள்

குண்டும்குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா். உடனடியாக ஒப்பந்தப் புள்ளிகளை அறிவித்து, முடக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT