கோயம்புத்தூர்

போலி காசோலை மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்த நபா் மீது வழக்கு

DIN

போலி காசோலை மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், காரமடையைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் (55). அதே பகுதியில் மில் நடத்தி வருகிறாா். இவா் கோவை, கணபதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கல்யாண சுந்தரத்தின் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம், தில்லியிலுள்ள சுரேஷ்குமாா் மேத்தா என்பவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

இது குறித்து கணபதியில் உள்ள வங்கிக் கிளை மேலாளரிடம் கல்யாணசுந்தரம் கேட்டுள்ளாா். அப்போது கல்யாணசுந்தரத்தின் நிறுவனத்தில் இருந்து அளிக்கப்பட்ட காசோலை மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் அனுப்பப்பட்டதாக வங்கித் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விசாரித்ததில் அது போலியான காசோலை என்பது தெரியவந்தது.

இதையடுத்து கல்யாணசுந்தரம் அளித்தப் புகாரின்பேரில் கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா், தில்லியைச் சோ்ந்த சுரேஷ் குமாா் மேத்தா என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT