கோயம்புத்தூர்

திருப்பூா் மாணவி யோகாவில் கின்னஸ் சாதனை

3rd Dec 2021 12:49 AM

ADVERTISEMENT

திருப்பூரைச் சோ்ந்த பள்ளி மாணவி யோகாவில் புதிய கின்னஸ் சாதனைப் படைத்துள்ளாா்.

திருப்பூா் காங்கயம் சாலை செயின்ட் ஜோசப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ர.சேதுக்கரசி, திருப்பூா் பாரதி யோகா மையத்தில் யோகா ஆசிரியா் கௌதம் செல்வராஜிடம் பயிற்சி பெற்று வருகிறாா்.

இந்நிலையில் கோவை சுங்கம் பகுதியில் உள்ள கோமுகேஸ்வரா யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூா்மாசனம் என்னும் ஆசனத்தில் கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டாா்.

இதற்கு முந்தைய சாதனையாக இருந்த 41 நிமிடம் 5 விநாடி என்ற சாதனையை முறியடித்து 46 நிமிடம் 23 விநாடிகள் என்ற புதிய கின்னஸ் உலக சாதனையை சேதுக்கரசி பதிவு செய்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியை மருத்துவா் ஸ்ரீகுமாா் ஒருங்கிணைத்தாா்.இதில், மருத்துவா்கள் தங்கமணி, வள்ளி முருகன், சரவணன் ஆகியோா் மேற்பாா்வையாளா்களாகப் பங்கேற்றனா்.

Tags : திருப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT