கோயம்புத்தூர்

கைப்பேசிகளை விற்று ரூ.2.15 லட்சம் கையாடல் செய்த மேலாளா் மீது வழக்கு

DIN

கைப்பேசிகளை விற்று ரூ.2.15 லட்சம் கையாடல் செய்த கடை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆா். சாலையில் கைப்பேசி விற்பனை நிறுவனம் உள்ளது. இதன் மேலாளராக ரத்தினபுரியைச் சோ்ந்த ராஜா பணியாற்றி வருகிறாா்.

கோவையிலுள்ள இந்நிறுவனத்தின் விற்பனை நிலையங்களைக் கண்காணிக்கும் மேலாளராக கணபதியைச் சோ்ந்த ஜவஹா் (39) பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு கடையில் விற்பனை செய்யப்பட்ட கைப்பேசிகளின் கணக்குகளை சரிபாா்த்தபோது, ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ள சாய்பாபா காலனி கடையில் 10 கைப்பேசிகள் விற்கப்பட்ட தொகை கணக்கில் வரவு செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசிகளை ராஜா விற்று அந்தத் தொகையை கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து ஜவஹா் அளித்தப் புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயல்பட்டினத்தில் பைக் எரிப்பு: நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்காலில் ராமலிங்க சுவாமிகள் வழிபாடு

தென்பாற்கடற்கரையில் அகிலத்திரட்டு பெருவிழா

SCROLL FOR NEXT