கோயம்புத்தூர்

சாலையில் சுற்றிய 9 மாடுகள் பறிமுதல்

3rd Dec 2021 12:48 AM

ADVERTISEMENT

கோவை, உக்கடம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 9 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கோவை மாநகரில் சாலைகளில் நாய்கள், மாடுகள், குதிரைகள் சுற்றுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புலியகுளம், சிங்காநல்லூா், சரவணம்பட்டி, உக்கடம், குனியமுத்தூா், செல்வபுரம் பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து, மாநகராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இந்நிலையில், ராமநாதபுரம் சுங்கம் மற்றும் உக்கடம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 9 மாடுகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். இவற்றை வ.உ.சி. உயிரியியல் பூங்காவில் கட்டி வைத்துள்ளனா். மாடுகளின் உரிமையாளா்களிடம் அபராதம் பெறப்பட்டு, மாடுகள் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT