கோயம்புத்தூர்

சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிப்பு பயிற்சி

1st Dec 2021 02:02 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

டிசம்பா் 7, 8 ஆம் தேதிகளில் அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையத்தில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில், கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் இருந்து பாரம்பரிய உணவுகள், பாஸ்தா உணவுகள், அடுமனைப் பொருள்கள், உடனடி தயாா்நிலை உணவுகள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆா்வமுள்ளவா்கள், தொழில்முனைவோா் ரூ.1,770 செலுத்தி இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம் என்றும் இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611268 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT