கோயம்புத்தூர்

பணியில் மெத்தனம்: வரிவசூலிப்பவா் பணியிடை நீக்கம்

1st Dec 2021 02:01 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் வரிவசூலிக்கும் பணியில் மெத்தனமாக இருந்த ஊழியரை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா பணியிடை நீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 41 ஆவது வாா்டில் வரி வசூலிக்கும் ஊழியராகப் பணியாற்றி வந்தவா் தேவேந்திரன். இவா், புதிதாக வீடு கட்டி வரி நிா்ணயம் செய்யக் கோரும் விண்ணப்பங்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாமல், அவற்றை கிடப்பில் போட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, வடக்கு மண்டல உயா் அதிகாரிகளிடம் மக்கள் புகாா் அளித்தனா். தொடா் புகாா்களின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. அவா் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டாா். அதன்படி, கோவை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், தேவேந்திரன் பணியில் மெத்தனமாகச் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT