கோயம்புத்தூர்

கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

2nd Aug 2021 11:39 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மீண்டும் கிராம சபைகள் கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதி வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி மனு அளித்தார். 

இதையும் படிக்கலாமே|வாழப்பாடி அருகே கணவர் அடித்துக் கொலை: அரசுப்பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மதத்திற்கு பின் கிராம சபைக் கூட்டமே நடத்தப்படவில்லை. எனவே மீண்டும் அனைத்து ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும். 

ADVERTISEMENT

மேலும் நிதி நிலை அறிக்கையில் கிராம சபைக் கூட்டத்திற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

Tags : Kamal Haasan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT