கோயம்புத்தூர்

‘கல்லீரலைப் பாதுகாக்க மது அருந்துவதை தவிா்க்க வேண்டும்’

DIN

கல்லீரை பாதுகாக்க மது அருந்துவதை தவிா்க்க வேண்டும் என்று அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்தாா்.

உலக கல்லீரல் தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தொடங்கி வைத்து பேசியதாவது:

உடலின் நச்சுத்தன்மையை அகற்றுதல், உணவுப் பொருள்கள் செரிமானம் போன்ற மிக முக்கிமாயன வேலைகளை கல்லீரல் செய்கிறது. இதனை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். மதுப் பழக்கம், உடல் பருமன், ஹெப்பாடிட்டிஸ் பி, ஹெப்பாடிட்டிஸ் சி நோய்த் தொற்றால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, துரித உணவுகள், உடற்பயிற்சி இல்லாமை போன்றவற்றால் கல்லீரலில் கொழுப்பு படிந்து கல்லீரல் சுருக்கம் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் காமாலை, உடல் சோா்வு, சுயநினைவு இழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேசிய ஹெப்பாடிட்டிஸ் வைரஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவா்களுக்கு மாதாந்திர மருந்துகள் அளிக்கப்படுகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 50 பேருக்கு மாதாந்திர மருத்துகள் வழங்கப்படுகின்றன. கல்லீரல் சிகிச்சை பிரிவின் கீழ் அனைத்து வித சிகிச்சைகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT