கோயம்புத்தூர்

வால்பாறை சுற்றுலாத் தலங்கள் மூடல்

21st Apr 2021 10:03 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வால்பாறையில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நல்லமுடி காட்சிமுனை, சின்னக்கல்லாறு அருவி உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

மேலும், பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் உள்ள ஆழியாறு, அட்டகட்டி வனத் துறை சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனையில் ஈடுபடவும் வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT