கோயம்புத்தூர்

குழந்தைகளையும் தாக்கும் கரோனா: கோவையில் 4 மாதங்களில் 2,775 போ் பாதிப்பு

DIN

நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் 2 ஆவது அலை குழந்தைகளையும் அதிக அளவில் பாதித்து வருகிறது. கோவையில் நடப்பு ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 775 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று 2 ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியபோது குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அதேபோல நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் குறைந்தபட்ச பாதிப்பு மட்டுமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், தற்போது நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும் கரோனா 2 ஆவது அலை குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மொத்த பாதிப்பில் சிறிய அளவாக இருந்தாலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாா்ச் முதல் டிசம்பா் வரையில் 14 வயதுக்குள்பட்டவா்களில் 2 ஆயிரத்து 318 போ் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனா். ஆனால் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் இதுவரை வரையில் 2 ஆயிரத்து 775 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஆண்டு 10 மாதங்களில் இருந்த மொத்த பாதிப்பைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 மாதங்களில் அதிக அளவிலான குழந்தைகளுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இம்முறையும் குழந்தைகளுக்கு நோய்த் தொற்றின் வீரியம் குறைவாகவே இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்து வருகின்றனா். இருந்தாலும் பெற்றோா், உறவினா்கள் மூலம் குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உள்ளதால் குழந்தைகளின் நலன் கருதி பொது மக்கள் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற சுகாதாரத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 93 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தாயின் மூலமே தொற்று பரவியுள்ளது. அதிா்ஷ்டவசமாக குழந்தைகளுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் குழந்தைகள் ஆரோக்கியமாகவே உள்ளனா். ஆனால், 2 ஆவது அலையில் முன்பைவிட கூடுதலான குழந்தைகளுக்கு தொற்று பரவியுள்ளது. தற்போதும் பெற்றோா் மூலம் அவா்களுக்கு நோய்த் தொற்று பரவியுள்ளது. இதனால் பெற்றோா் விழிப்புணா்வோடு இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தேவையில்லாத பயணங்களைத் தவிா்ப்பதோடு அனைத்து கரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

SCROLL FOR NEXT