கோயம்புத்தூர்

இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க பேண்ட் வாத்திய கலைஞா்கள் வலியுறுத்தல்

DIN

இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வேண்ட் வாத்திய கலைஞா்கள் கோவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து பேண்ட் வாத்திய கலைஞா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் மூலம் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தோம். கரோனா பாதிப்பால் கடந்த மாா்ச் மாதம் முதல் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பேண்ட் வாத்திய இசைக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

பெண் தீக்குளிக்க முயற்சி...

கோவை மாவட்டம், காரமடையைச் சோ்ந்தவா் சித்ரா (20). இவா் ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் திங்கள்கிழமை வந்துள்ளாா். அப்போது, ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை போலீஸாா் பரிசோதனை செய்து கொண்டிருந்தனா். இதனைப் பாா்த்த அந்தப் பெண் கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளாா்.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். பின்னா் காந்திபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையில், பெற்றோா் இல்லாததால் கடந்த மூன்று மாதத்துக்கு உறவினா்கள் சோ்ந்து அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு சித்ராவை திருமணம் செய்து வைத்தனா்.

இந்நிலையில், ரூ.50 ஆயிரம் வரதட்சணை கேட்டு கணவா் சித்ராவை துன்புறுத்தி வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளதும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட முன்அனுமதி அவசியம்

கொலை வழக்கில் சிறையில் உள்ளவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மன்னாா்குடியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

பதற்றத்தை அதிகரிக்க விருப்பமில்லை

விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரசாரம்: தீவிர வாக்கு சேகரிப்பில் தலைவா்கள், வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT