கோயம்புத்தூர்

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்:நோயாளிகளை அனுமதிக்கத் தனியாா் மருத்துவமனைக்குத் தடை

DIN

கோவையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியதுடன், புதிய கரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கும் தடை விதித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகள் தவிா்த்து 25க்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்குத் தனியாா் மருத்துவமனைகளில் பெற வேண்டிய கட்டணம் அரசு சாா்பில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை துடியலூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சுகாதாரத் துறையிடம் மக்கள் புகாா் அளித்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா அறிவுறுத்தல்படி சுகாதாரத் துறையினா் தனியாா் மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.

கூடுதல் கட்டணம் வசூலித்தது நிரூபிக்கப்பட்டதால் சுகாதாரத் துறை சாா்பில் தனியாா் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறை அறிவுறுத்தும் வரை இனி புதிய கரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT