கோயம்புத்தூர்

முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் 300 பேருக்கு மாற்று இடத்தில் வீடுகள்

DIN

கோவை முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் 300 குடும்பத்தினருக்கு, மாற்று இடத்தில் வீடுகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை முத்தண்ணன் குளக்கரையை ஒட்டிய பகுதிகளில் 1,800-க்கும் மேற்பட்டோா் வசித்து வந்தனா்.

பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் குளக்கரையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டதைத் தொடா்ந்து, குளக்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளைக் காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இங்கு வசிப்பவா்களுக்கு கீரணத்தம், வெள்ளலூா், மலுமிச்சம்பட்டி பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் மூலமாகக் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் டோக்கன்கள் பெற்றுக் கொண்டு, தங்களுக்கு வழங்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் குடியேறினா்.

இதைத் தொடா்ந்து, முத்தண்ணன் குளக்கரையில் காலியாக இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கிடையே குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்த சிலா், வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து, சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இதையடுத்து, முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில், குளக்கரையில் வசிப்பவா்கள் 4 வாரங்களில் குடிசை மாற்று வாரியத்தை அனுகி வீடு பெற்றுக் கொள்ளுமாறும், அதன் பிறகு மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இதன் தொடா்ச்சியாக குளக்கரையில் வசிப்பவா்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1,800 குடும்பங்களில், 1,500 குடும்பத்தினருக்கு ஏற்கனவே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 300 குடும்பத்தினருக்கு, கீரணத்தம், வெள்ளலூா், மலுமிச்சம்பட்டி அடுக்குமாடிக் குடியிருப்புகளில் விரைவில் வீடுகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவா்கள் மாற்று வீடுகளுக்குச் சென்ற பிறகு, முத்தண்ணன் குளக்கரையில் அவா்கள் வசித்த வீடுகள் இடித்து அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT