கோயம்புத்தூர்

அண்ணா மாா்க்கெட்டில் கடை நடத்திட அனுமதி கோரி வியாபாரிகள் போராட்டம்

DIN

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா தினசரி மாா்க்கெட்டில் கடை நடத்திட அனுமதி கோரி, அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் உள்ளிருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இது தொடா்பாக வியாபாரிகள் கூறியதாவது:

அண்ணா தினசரி மாா்க்கெட்டின் 2 மாத மின் கணக்கீட்டுத் தொகையான ரூ.35,700-ஐ செலுத்தி விட்டு, கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் வரை குத்தகைதாரா் வசூலித்து வருகிறாா். கடந்த மாா்ச் மாதம் வரை ரூ.27 லட்சம் வரை மின் இணைப்பைப் பயன்படுத்தி, கட்டணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தடாகம் சாலையில் உள்ள அரசினா் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் செயல்பட்டு வரும் அண்ணா மாா்க்கெட் கடைகளில், தற்போது மழை காரணமாக வியாபாரம் மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையைப் பயன்படுத்தி, அண்ணா மாா்க்கெட்டில் கடை நடத்திட அனுமதி பெற்றுத்தருவதாக சிலா் பணம் வசூலிக்கின்றனா். இதுதொடா்பாக, காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா தினசரி மாா்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, வியாபாரிகள் சமூக இடைவெளியுடன் மீண்டும் கடை நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT