கோயம்புத்தூர்

வியாபாரி கொலை வழக்கில் சரணடைந்தவருக்கு 4 நாள் போலீஸ் காவல்: கோவை நீதிமன்றம் அனுமதி

DIN

கோவையில் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்தவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.

கோவை, ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பிஜு (40). இவா் ராம் நகரில் பழச்சாறு கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், நரசிம்மநாயக்கன்பாளையத்தை சோ்ந்த ஆறுமுகம் என்பவரின் மகனான நிதீஷ்குமாரை, ராம் நகரைச் சோ்ந்த சிலா் கத்தியால் குத்தினா்.

இதையடுத்து, நிதீஷ்குமாா் மீதான தாக்குதலுக்கு பிஜு தான் காரணம் என நினைத்த அவரது ஆதரவாளா்கள் அவரைக் வெட்டிக் கொலை செய்தனா். இது குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 6 பேரைக் கைது செய்தனா். வழக்கின் முக்கிய எதிரியான ஆறுமுகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காட்டூா் போலீஸாா் கோவை நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண்.2) மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதித் துறை நடுவா் ஞானசம்பந்தம், ஆறுமுகத்தை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT