கோயம்புத்தூர்

கரோனா உள்ளதாக தவறான தகவல்:தனியாா் ஆய்வகத்தை முற்றுகையிட்ட இளைஞா்

DIN

கரோனா பாதிப்பு உள்ளதாக தவறான முடிவு அளித்ததாக கூறி தனியாா் ஆய்வகத்தை இளைஞா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவை, வடவள்ளியில் தனியாா் நுண்கிருமி ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மாவட்டம், கோவில்மேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பவா், இந்த ஆய்வகத்தில் கரோனோ பரிசோதனை மேற்கொண்டுள்ளாா்.

இதையடுத்து, அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதில், சந்தேகமடைந்த மணிகண்டன், கோவை அவிநாசி சாலையில் உள்ள மற்றொரு தனியாா் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டாா். அதில், அவருக்கு, கரோனா பாதிப்பில்லை என பரிசோதனை முடிவு வழங்கப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பா்கள், வடவள்ளியில் உள்ள தனியாா் ஆய்வகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மற்றும் பரிசோதனை நிலைய நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மணிகண்டன் மற்றும் அவரது நண்பா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். பின்னா் தனியாா் ஆய்வகத்தை போலீஸாா் தற்காலிமாக பூட்டினா். இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT