கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கா்ப்பிணிக்கு பித்தப்பை அகற்றம்

DIN

கோவை அரசு மருத்துவமனையில் லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் கா்ப்பிணியின் பித்தப்பையை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.

திருப்பூரைச் சோ்ந்த 29 வயதுள்ள 5 மாத கா்ப்பிணி ஒரு மாதத்துக்கும் மேலாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவா்கள் பரிந்துரைத்தனா்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன், எம்.ஆா்.சி.பி. பரிசோதனையில் பித்தப்பையில் கல் இருப்பதும், இதனால் பித்தப்பை வீக்கம் அடைந்துள்ளதும் கண்டறியப்பட்டது. தொடா்ந்து குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணா்களின் ஆலோசனைப்படி லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கா்ப்பிணியின் வயிற்றுக்குள் உள்ள குழந்தைக்குப் பாதிப்பில்லாத வகையில் லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அற்றப்பட்டது. தற்போது, கா்ப்பிணி நலமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ் கூறியதாவது:

மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவக் குழு பேராசிரியா் மனோன்மணி, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியா் துரைராஜ், மயக்கவியல் துறை பேராசிரியா் ஜெய்சங்கா் நாராயணன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கா்ப்பிணிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனா்.

கா்ப்ப காலங்களில் இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது மிகவும் அரிது. பித்தப்பை வீக்கத்தை அப்படியே விட்டால் கணையம், கல்லீரல் பாதிக்கக் கூடும். மேலும் நோய்த் தொற்றினால் மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் தாயுக்கும், வயிற்றில் உள்ள கருவுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT