கோயம்புத்தூர்

கரோனா சிகிச்சை மையத்தில் ஆணையா் ஆய்வு

DIN

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகரப் பகுதிகளில், கரோனா தொற்றுத் தடுப்பு தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், திருச்சி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் அறிகுறி உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தில் மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதை பாா்வையிட்டாா். முகக் கவசம் அணியாமல் சாலையில் நடமாடுபவா்களுக்கு அபராதம் விதிக்குமாறு மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையா் முருகன், மண்டல சுகாதார அலுவலா்கள் சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT