கோயம்புத்தூர்

விவசாயிகள் விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது: பாஜக மாநிலத் துணைத் தலைவா் பேட்டி

23rd Sep 2020 07:06 AM

ADVERTISEMENT

விவசாயிகள் தங்களது விளை பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவா் கனகசபாபதி தெரிவித்தாா்.

இது குறித்து கோவையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

விவசாயத் துறையில் இருந்த பெரிய கட்டுப்பாடுகளை பிரதமா் தளா்த்தி இருக்கிறாா். வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகள் ஒப்பந்தம் அதிகாரம் மற்றும் பாதுகாப்புச் சட்டம் என இரண்டு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று தனது விளை பொருள்களை ஒப்பந்தம் செய்து விற்க முடியும். விவசாயிகள் நேரடியாக நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளா்களுக்கும் தனது விளை பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களின் மூலம் மாநில உரிமைகள் நீா்த்துப்போகும் என்ற எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அதிக விலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு தங்களது விளை பொருள்களை விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றாா்.

விவசாய அணி மாவட்ட தலைவா் செந்தில்குமாா், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளா் தரணி சிவா, ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளா் சபரி கிரிஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT