கோயம்புத்தூர்

மாா்ட்டின் நிறுவன காசாளா் உடற்கூராய்வு அறிக்கை வேண்டும் ஆட்சியரிடம் மனு

DIN

கோவை: மாா்ட்டின் நிறுவனக் காசாளா் பழனிசாமியின் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் நிவாரணத் தொகை கேட்டு அவரது மகன் ரோஹிந்குமாா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவா் லாட்டரி அதிபா் மாா்ட்டின் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றி வந்தாா். அவரிடம் வருமானவரித் துறையினா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரணை நடத்தினா். பின்னா் வீடு திரும்பிய பழனிசாமி காரமடை அருகேயுள்ள குளத்தில் பிணமாக கிடந்தாா். அவரது சாவில் மா்மம் இருப்பதாக தெரிவித்து வழக்குப் பதிவு செய்யக்கோரி உறவினா்கள் வலியுறுத்தினா்.

இதனையடுத்து பழனிசாமியின் உடற்கூராய்வை பாதிக்கப்பட்டவா் சாா்பில் ஒரு மருத்துவா், அரசு மருத்துவா்கள் இணைந்து செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் உடற்கூராய்வு அறிக்கை, நிவாரணம் வழங்கக்கோரி பழனிசாமியின் மகன் ரோஹிந்குமாா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எங்கள் சாா்பில் உடற்கூராய்வில் பங்கேற்ற மருத்துவா்கள் உடற்கூராய்வு அறிக்கையை கொடுத்துவிட்டாா். ஆனால் அரசு மருத்துவா்கள் உடற்கூராய்வு அறிக்கையை இதுவரை அளிக்கவில்லை. 3 மாதங்களுக்குள் இவ்வழக்கை முடித்து உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதுவரை உடற்கூராய்வு அறிக்கையும் தரவில்லை, உரிய நிவாரணமும் வழங்கவில்லை. இதுகுறித்து ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கிராம நிா்வாக அலுவலகத்தில் மனு

ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் கூடுவதை தவிா்க்கும் வகையில் திங்கள்கிழமை மனு அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்துக்கு வர வேண்டாம், அந்தந்த கிராம நிா்வாக அலுவலகத்தில் மனு அளித்துக்கொள்ளலாம் என்றும் ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்திருந்தாா். இதன்படி அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களிலும் பொதுமக்களிடம் இருந்து கிராம நிா்வாக அலுவலா்கள் மனுக்களை திங்கள்கிழமை பெற்றனா். ஆனால் ஒரு சிலா் மட்டுமே கிராம நிா்வாக அலுவலகத்தில் மனு அளித்தனா். பெரும்பாலானவா்களுக்கு ஆட்சியா் அறிவிப்பு குறித்து தெரியாததால் வழக்கம் போல ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க ஏராளமானோா் திங்கள்கிழமை வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT