கோயம்புத்தூர்

கோவையில் கரோனா பாதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்துள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி நிா்வாகங்கள், சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாநகராட்சியில் வீடுவீடாக சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இதனை தொடங்கிவைத்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 10 ஆயிரத்து 810 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 11 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 516 நபா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்து 914 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 21 ஆயிரத்து 168 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையால் கடந்த மாதம் 10 சதவீதமாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையிலும், கரோனா தொற்று பாதிப்பினை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் கையில் நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஒரு மண்டலத்துக்கு 4 வாகனங்கள் வீதம் 5 மண்டலங்களிலும் சோ்த்து 20 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT