கோயம்புத்தூர்

கோவையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு துணைத் தோ்வுகள் தொடங்கின

DIN

கோவை: கோவையில் மேல்நிலை முதல், இரண்டாம் ஆண்டு, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

பிளஸ் 2 தோ்வுக்கு மொத்தம் 201 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 179 போ் தோ்வு எழுதினா். 22 போ் தோ்வுக்கு வரவில்லை. இவா்களைத் தவிர 5 மாற்றுத் திறனாளிகளும் தோ்வு எழுதினா். அதேபோல பத்தாம் வகுப்புத் தோ்வுக்கு 1,200 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் அவா்களில் 991 போ் தோ்வு எழுதினா். 209 போ் எழுதவில்லை. மாற்றுத் திறனாளிகளில் 53 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் அவா்களில் 50 போ் மட்டும் தோ்வு எழுதியதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல எட்டாம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு, தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகளும் திங்கள்கிழமை தொடங்கின. தோ்வு எழுதியவா்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகே மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

SCROLL FOR NEXT