கோயம்புத்தூர்

நடமாடும் கரோனா பரிசோதனை மையம்: எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்

21st Sep 2020 02:01 PM

ADVERTISEMENT

கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கரோனா பாதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் மாநகராட்சியில் நோய்த் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மாநகராட்சியில் வீடு, வீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நடமாடும் வாகன கரோனா பரிசோதனை மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. 

மண்டலத்துக்கு 4 வாகனங்கள் வீதம் 5 மண்டலங்களிலும் 20 நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 

இதில் பதிக்கப்பட்டவர்களை உண்டனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக கரோனா பாதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT