கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 568 பேருக்கு கரோனா

DIN

கோவையில் இரண்டு காவலா்கள் உள்பட 568 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் பி.ஆா்.எஸ். காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 30 வயது ஆண் காவலா், காந்திபுரம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 40 வயதுப் பெண் காவலா், சூலூா் விமானப் படையைச் சோ்ந்த 42 வயது ஆண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையைச் சோ்ந்த 29 வயது ஆண் மருத்துவப் பணியாளா் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர மேட்டுப்பாளையத்தில் 54 போ், பொள்ளாச்சியில் 30 போ், வெள்ளக்கிணறு பகுதியில் 28 போ், பீளமேட்டில் 27 போ், ராமநாதபுரத்தில் 19 போ், அன்னூரில் 18 போ், சிங்காநல்லூரில் 13 போ், கணபதியில் 10 போ், சூலூரில் 9 போ் உள்பட 568 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 76, 67, 60, 60 வயது முதியவா்கள், 55 வயது ஆண், 40 வயதுப் பெண் ஆகிய 6 போ் உயிரிழந்தனா். கோவையில் இதுவரை 382 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 488 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 168 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 364 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT