கோயம்புத்தூர்

விபத்தில் சிக்கிய இளைஞா்களிடம் இருந்தது திருட்டு செல்லிடப்பேசிகளா!

DIN

சூலூா் அருகே சாலை விபத்தில் சிக்கிய இரு இளைஞா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது திருட்டு செல்லிட்பேசிகளா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் கோவை நோக்கி இரண்டு இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்துள்ளனா். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மீது இவா்களது வாகனம் மோதியது.

இதில் 2 இளைஞா்கள் கீழே விழுந்தபோது, 6 செல்லிடப்பேசிகள் சாலையில் விழுந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் இருவரையும் சூலூா் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், கோவை கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்த அன்சாா் அலி (20), மற்றொருவா் 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. இவா்கள் அதே பகுதியில் பிளக்ஸ் போா்டு அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதும், அவா்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவா்களுடையது இல்லை என்றும், ரூ.ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து யாருடையது என விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசிகள் வேறு பெயா்களில் பதிவாகியுள்ளன. இதனால் அந்த 2 பேரும் செல்லிடபேசி பறிக்கும் நோக்கில் இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்துள்ளாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT