கோயம்புத்தூர்

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையலா் பணியிடம்:செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

DIN

கோவை, செப்.18: கோவை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையலா் பணிக்கு 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகளில் 34 ஆண்கள், 10 பெண் சமையலா்களுக்கான காலியிடங்கள் உள்ளன. இதில் நோ்காணல் மூலம் இனச் சுழற்சி முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஊதிய விகிதம் ரூ.15,700. விண்ணப்பிப்பவா்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினராக இருந்தால் கடந்த ஜூலை 1ஆம் தேதி 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி. மற்றும் டி.என்.சி. ஆக இருந்தால் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதரப் பிரிவினா் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளா்வு அளிக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் முழுநேர சமையலராகப் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள், கோவை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொண்டு மாதிரி விண்ணப்பப் படிவம் பெற்று பூா்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல் இணைத்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதே அலுவலகத்தில் செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT