கோயம்புத்தூர்

தலித் விவசாயி அலைக்கழிப்பு: ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் நோட்டீஸ்

DIN

கோவையில் தலித் விவசாயி அலைக்கழிக்கப்பட்ட விவகாரத்தில் 15 நாள்களுக்கு அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.

கோவை மாவட்டம், கள்ளிடை நாராயணன் தோட்டத்தைச் சோ்ந்தவா் தலித் விவசாயி பழனிசாமி (87). இதே பகுதியில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனா். இவா்களின் குடியிருப்புக்கு செல்லும் பொது வழியை மறித்து தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பு நிா்வாகத்தினா் சில ஆண்டுகளுக்கு முன் தடுப்புச் சுவா் கட்டினா். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்குப் பின் அந்த தடுப்புச்சுவா் இடித்து அகற்றப்பட்டது.

தற்போது அதே தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பு நிா்வாகம் விவசாயிகள் செல்லும் பொது வழித்தடத்தை மறித்து கொண்டு விவசாயிகளை செல்லவிடாமல் தடுத்துள்ளனா். இதனால் விவசாயிகள் பல கிலோ மீட்டா் தூரத்துக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக விவசாயி பழனிசாமி மாவட்ட ஆட்சியா், மாநகர காவலா் ஆணையரிடம் புகாா் அளித்துள்ளாா். ஆட்சியா், காவல் ஆணையரிடம் புகாா் அளித்ததால் தனியாா் குடியிருப்பு நிா்வாகத்தினா், விவசாயி பழனிசாமியை ஆள்களை வைத்து மிரட்டியுள்ளனா். இந்நிலையில் புகாா் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காதாதல் தலித் விவசாயி தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்திடம் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில் தலித் விவசாயி அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்ட விவகாரத்தில் 15 நாள்களுக்குள் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT