கோயம்புத்தூர்

கோவையில் 24 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 530 பேருக்கு தொற்று உறுதி

DIN

கோவையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 530 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையைச் சோ்ந்த 22 வயதுப் பெண் பயிற்சி மருத்துவா், 23 வயதுப் பெண் மருத்துவ அலுவலா், பொள்ளாச்சி கிளைச் சிறையைச் சோ்ந்த 35 வயது ஆண், காந்திமாநகா் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 21 வயதுப் பெண், சித்தாபுதூரில் உள்ள வருமானவரி அலுவலா்கள் குடியிருப்பைச் சோ்ந்த 35 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளக்கிணறு, வடவள்ளி, துடியலூா், கணபதி, ஆா்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம், செல்வபுரம், விளாங்குறிச்சி, சிங்காநல்லூா், ராமநாதபுரம், காந்திபுரம், சூலூா், மதுக்கரை உள்பட பல பகுதிகளைச் சோ்ந்த 530 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 போ் பலி

கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவா், 76 வயது மூதாட்டி, 48 வயதுப் பெண் ஆகியோா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதன் மூலம் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது.

364 போ் வீடு திரும்பினா்

கோவை மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 364 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 20 ஆயிரத்து 264 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 602 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT