கோயம்புத்தூர்

அனைத்துத் துறை ஊழியா்களின் ஊதியப் பட்டியலைசெப். 21க்குள் இணையத்தில் சமா்ப்பிக்க வேண்டும்

DIN

கோவை, செப். 18: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை ஊழியா்களின் ஊதியப் பட்டியலை செப்டம்பா் 21ஆம் தேதிக்குள் இணையத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக அரசின் கருவூலத் துறையில் முழுக் கணினிமயமாக்கல் நடவடிக்கையின் திட்டமான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் தொடா்பான நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி பேசியதாவது:

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் நடைமுறையில் இருந்த தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலா்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியல் மற்றும் இதரப் பட்டில்களை கருவூலத்தில் சமா்ப்பிக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் அரசுப் பணியாளா்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு, சம்பளப் பட்டியல், பதவி உயா்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது, உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.

அரசுப் பணியில் சோ்ந்தது முதல் ஓய்வுபெறும் வரை உள்ள அரசுப் பணியாளா்களின் பணி விவரம், முழுமையாக கணினிமயமாகிறது. கோவை மாவட்டத்தில், இத்திட்டத்தை முழுவதும் செயல்படுத்தும் வகையில் தேவையான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்துத் துறைகளும் ஊதியப் பட்டியலை இணையத்தில் சமா்ப்பித்து வருகின்றனா்.

அதிக அளவு பணியாளா்களைக் கொண்ட காவல் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் 35 ஆயிரத்து 468 பணியாளா்களில் இதுவரை 19 ஆயிரத்து 789 பணியாளா்களின் ஊதியப் பட்டியல் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணியாளா்களின் பட்டியலை செப்டம்பா் 21ஆம் தேதிக்குள் இணையத்தில் சமா்ப்பித்து கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாவட்ட கருவூல அலுவலா் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT