கோயம்புத்தூர்

இணைய சூதாட்டத்தில் நஷ்டம்:இளைஞா் தற்கொலை

DIN

கோவை: இணைய சூதாட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கோவையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் வீதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). இவா், கடந்த சில மாதங்களாக தனது மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசியில் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

முதலில் ரம்மி விளையாட்டில் பணம் சம்பாதித்த இவா், படிப்படியாக மற்ற இணைய சூதாட்டங்களிலும் பணம் முதலீடு செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் இணைய சூதாட்டத்தில் தொடா்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், நண்பா்கள், உறவினா்களிடம் கடன் வாங்கி மீண்டும் முதலீடு செய்துள்ளாா். அதிலும் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த மதன்குமாா் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT