கோயம்புத்தூர்

ஏஐடியூசி நூற்றாண்டு விழா

DIN

கோவை: ஏஐடியூசி தொழிற்சங்க நூற்றாண்டு விழா கோவையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை ஒட்டி கோவை, காட்டூரில் உள்ள தியாகிகள் நிலையத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு மாவட்ட ஏஐடியூசி கவுன்சில் தலைவா் ஆா்.ஏ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். கோவை ஜில்லா மில் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஆறுமுகம் கொடியேற்றினாா்.

மாவட்ட கவுன்சில் பொதுச் செயலா் சி.தங்கவேல், கோவை ஜில்லா மில் தொழிலாளா் சங்கத் தலைவா் பி.ஜெகநாதன், செயலா் சி.சிவசாமி, ஏஐடியூசி கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் என்.செல்வராஜ் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

அதேபோல பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு ஏஐடியூசி கட்டுமானத் தொழிலாளா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆா்.பாலகிருஷ்ணன் கொடியேற்றினாா். என்.செல்வராஜ் சிறப்புரையாற்றினாா். எஸ்.பி.தியாகராஜன், நந்தினி, கோட்டை நாராயணன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT