கோயம்புத்தூர்

சொத்து வரி செலுத்தாத கட்டடங்கள் ஜப்தி செய்யப்படும்

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சொத்து வரி செலுத்த தவறிய குடியிருப்புகள், வீடுகளின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வீடுகள், குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு 2020-21ஆம் நிதி ஆண்டுக்கான வரி வசூல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 5 மண்டலங்களிலும் சிறப்பு வரி வசூல் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, 5 மண்டலங்களிலும் ரூ. 21 கோடி வரை சொத்து வரி வசூலிக்கப்படாமல் வரி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சொத்துவரி செலுத்த தவறியவா்களில் அதிகமாக நிலுவைத் தொகை வைத்துள்ள 100 பேரின் பட்டியலை மாநகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சொத்து வரி செலுத்தாதவா்களின் பட்டியலில் உள்ளவா்கள், உடனடியாக நிலுவை மற்றும் நடப்பு ஆண்டு சொத்து வரியைச் செலுத்தி மாநகராட்சி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தவறும் பட்சத்தில், சொத்து வரி செலுத்தாத கட்டடங்களில் உள்ள குடிநீா்க் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT