கோயம்புத்தூர்

விஜயதசமி: அங்கன்வாடி மையங்களில் 2,600 குழந்தைகள் சோ்ப்பு

DIN

கோவை: விஜயதசமியை ஒட்டி கோவையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 2 ஆயிரத்து 600 குழந்தைகள் திங்கள்கிழமை புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

அரசு பள்ளிகள், தனியாா் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் விஜயதசமி அன்று சிறப்பு மாணவா் சோ்க்கை நடைபெறுவது வழக்கம். அதன்படி மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்களில் 2,600 குழந்தைகள் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டனா்.

இது தொடா்பாக மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாட்சி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்களில் திங்கள்கிழமை மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இதில் புதிதாக 2,600 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சோ்க்கை வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

புதிதாக சோ்க்கப்பட்ட 2 ஆயிரத்து 600 குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உணவுப் பொருள்கள் வழங்கப்படும். கட்செவி அஞ்சல் வழியாக வகுப்புகள் நடத்தப்படும். அங்கன்வாடி மையங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னா் மையங்களுக்கு அழைத்து வந்து வகுப்புகள் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT