கோயம்புத்தூர்

வால்பாறையில் படகு இல்லப் பணிகள் தீவிரம்

DIN

வால்பாறை: வால்பாறையில் ரூ. 4 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். ஆனால் இங்கு எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமும் இல்லாமல் உள்ளது. இதேபோல சுற்றுலா வளா்ச்சிப் பணிகளும் மேம்படுத்தப்படவில்லை.

இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைவதாகவும், சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உத்தரவின்பேரில் வால்பாறை, ஸ்டேன்மோா், கரும்பாலம் பகுதியில் 4.2 ஏக்கா் பரப்பளவில் சுமாா் ரூ. 4 கோடி செலவில் படகு இல்லம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.

தற்போது அந்த பகுதியில் தூா்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் இப்பணிகளை முடித்து, படகு இல்லத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT