கோயம்புத்தூர்

பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா் மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவா்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தலுக்கு நவம்பா்10ஆம் தேதிக்குள்ளும், புதிதாக உதவித்தொகை கோருபவா்கள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள்ளும் உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இணையதளத்தில் புதுப்பித்தல் விண்ணப்பங்களை வரும் டிசம்பா் 15ஆம் தேதிக்குள்ளும், புதிதாக உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களை 2021 ஜனவரி 31க்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம். இணையதளத்திலும் உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்த விவரங்கள், விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT