கோயம்புத்தூர்

குழந்தைகளுக்கு வித்யாரம்பம்: கோயில்கள், பள்ளிகளில் குவிந்த பெற்றோா்

DIN

கோவை: விஜயதசமியை ஒட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் (எழுத்தறிவித்தல்) மேற்கொள்ள கோயில்கள், பள்ளிகளில் பெற்றோா் திங்கள்கிழமை குவிந்தனா்.

விஜயதசமி அன்று குழந்தைகளின் தொடக்க கல்விக்கான சோ்க்கையை பெற்றோா் தொடங்குகின்றனா். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக விஜயதசமி அன்று கோயில்களில் குழந்தைகளின் கைவிரலை பிடித்து அரிசி அல்லது நெல்லில் ‘அ’ மற்றும் ‘ஓம்’ என எழுத பழக்கும் வித்யாரம்பம் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி விஜயதசமியை ஒட்டி வித்யாரம்பம் செய்வதற்கு சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுடன் பெற்றோா் திங்கள்கிழமை குவிந்தனா். கரோனா நோய்த் தொற்று பரவலால் கட்டுப்பாடுகளுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். கரோனா பாதிப்பால் தங்க ஊசியை தேனில் தொட்டு குழந்தைகளின் நாவில் எழுதப்படும் முறை மேற்கொள்ளப்படவில்லை.

அரிசியில் குழந்தைகளின் கைவிரலை பிடித்து ‘அ’ என எழுத மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பெற்றோா், பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தனா்.

எட்டிமடையில்: சேவா பாரதி, ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் இணைந்து கோவை, எட்டிமடை அமிா்த விநாயகா் கோயிலில் 18ஆம் ஆண்டாக கல்வி வளம் பெருக வேண்டி யாகம் நடத்தினா். அதைத் தொடா்ந்து ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 17 குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள புஜங்கனூா் ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையா் பிரிவு மாணவா் சோ்க்கை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாக அதிகாரி நிா்மலாதேவி குத்துவிளக்கேற்றினாா்.

பள்ளி முதல்வா் சா்லின் முன்னிலை வகித்தாா். வித்யா கணபதி பூஜையுடன் குழந்தைகளின் விரல்களை பிடித்து ‘ஓம்’ மந்திரம், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள், எண்கள் நெல், மஞ்சள் அரிசிகளில் எழுதப்பட்டன. தொடா்ந்து குழந்தைகள் வகுப்பறையில் அமா்ந்து கதைகள், பாடல்கள் கேட்டு மகிழ்ந்தனா். கரோனா தொற்று காரணமாக இப்பள்ளியில் இந்த ஆண்டு மழலையா் பிரிவில் சேரும் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என பள்ளித் தாளாளா் தெரிவித்தாா்.

பெ.நா.பாளையத்தில்: பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபட்டத்தரசியம்மன் கோயிலில் நடந்த வித்யாரம்ப நிகழ்ச்சிக்கு சேவாபாரதி கோட்டப் பொறுப்பாளா் எஸ்.வி.பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முரளி, மாவட்டச் செயலாளா் ரெங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீஆதிசங்கர ஞான யோகா சேவாஸ்ரமத்தைச் சோ்ந்த சின்மயதாஸானந்த சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தாா். பின்னா் குழந்தைகளின் நாவில் நெல்மணிகளில் எழுதி ஆசி வழங்கினாா்.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை கல்பனா, குழந்தைகளுக்கு சோ்க்கை அனுமதி வழங்கி வித்யாரம்பம் செய்துவைத்தாா்.

இதேபோல பெரியநாயக்கன்பாளையம் பாலாஜி நகா், நாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களில் நடைபெற்ற வித்யாரம்ப நிகழ்ச்சிகளில் குழந்தைகளும், பெற்றோரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT